2011-06-04 15:55:35

குரோவேசிய பிரதமருடன் திருத்தந்தையின் சந்திப்பு


ஜூன் 04, 2011. ஏறத்தாழ 45 நிமிடங்களை அரசுத்தலைவர் மாளிகையில் செலவிட்ட திருத்தந்தை, அங்கிருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலுள்ள திருப்பீடத்தூதரகம் நோக்கி பயணமானார். திருப்பீடத் தூதரகத்தில் குரோவேசியாவின் பெண் பிரதமர் ஜத்ராங்கா கோசோரைச் சந்தித்து சிறிது நேரம் உரையாடினார் பாப்பிறை. 1953ம் ஆண்டு பிறந்த பிரதமரும் சட்டத்துறையில் பட்டம் பெற்றவர். இவர் பத்திரிகைத் துறையில் நிருபராகவும் வானொலியில் அறிவிப்பாளராகவும் இருந்துள்ளார். குடும்பத்திற்கான அமைச்சராக பணியாற்றிய இவர், 2009ம் ஆண்டு ஜூலை மாதம் 6ந் தேதி குரோவேசியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
திருத்தந்தையுடன் ஆன சந்திப்பை முடித்து பிரதமர் கோசோர் திருப்பீடத் தூதரகத்திலிருந்துச் சென்றபின், திருப்பீடத் தூதரகத்திலேயே மதியஉணவருந்தி சிறிது ஓய்வும் எடுத்துக்கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இத்துடன் அவரின் குரோவேசிய நாட்டிற்கான முதல் திருப்பயணத்தின் முதல் நாள் காலை பயணத்திட்டங்கள் நிறைவுக்கு வந்தன.








All the contents on this site are copyrighted ©.