சீனாவில் நடத்தப்படும் கட்டாயக் குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களுக்கு உலக அமைப்புக்கள்
நிதி உதவிகள் வழங்கக்கூடாது – பெண்கள் அமைப்பின் தலைவர்
ஜூன் 02,2011. சீனாவில் நடத்தப்படும் கட்டாயக் கருக்கலைத்தல், மற்றும் கட்டாயக் குடும்பக்கட்டுப்பாடு
ஆகியவற்றிற்கு உலகின் பல அமைப்புக்கள் நிதி உதவிகள் வழங்கக்கூடாதென்று பெண்கள் அமைப்பின்
தலைவர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ‘எல்லைகள் கடந்த பெண்களின் உரிமைகள்’ என்று
பொருள்படும் Women's Rights Without Frontiers என்ற அனைத்துலக அமைப்பின் தலைவரான Reggie
Littlejohn சீனாவில் பெண்கள் படும் துயரங்களைப் பட்டியலிட்டுக் கூறியுள்ளார். குடும்பக்
கட்டுப்பாட்டுக்கென ஐ.நா. உருவாக்கியுள்ள UNFPA, IPPF எனப்படும் அகில உலக திட்டமிட்ட
பெற்றோர் கூட்டமைப்பு ஆகிய உலக நிறுவனங்களுக்குப் பல்வேறு நாடுகளிலிருந்தும் உதவித்தொகைகள்
வழங்கப்படுகிறதென்றும் இவ்வுலக அமைப்புக்கள் சீனாவின் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டிற்கு
நிதி உதவிகள் வழங்குகின்றன என்றும் Reggie விளக்கினார். சீனா மேற்கொண்டுள்ள மக்கள்
தொகை கட்டுப்பாட்டுத் திட்டங்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடைபெறுகிறதென்று விளக்கிய
Reggie, இத்திட்டங்களால் ஒவ்வொரு நாளும் 500 பெண்கள் தங்கள் உயிரை இழக்கின்றனர் என்று
கூறினார்.