2011-05-31 15:54:46

உலகில் உணவுப்பொருட்களின் விலைகள் 2030ம் ஆண்டில் இரண்டு மடங்காகும்


மே 31, 2011. உலகில் உணவுப்பொருட்களின் விலைகள் 2030ம் ஆண்டில் இரண்டு மடங்காகும் ஆபத்து இருப்பதாக எச்சரித்துள்ளது OXFAM எனும் பிறரன்பு அமைப்பு.
உலக அளவிலான உணவு அமைப்பு முறைகளில் நல்ல சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படவில்லையெனில், இருபது ஆண்டுகளில் உணவுப்பொருட்களின் விலை இரு மடங்காகும் என எச்சரிக்கும் இவ்வமைப்பு, இதற்கான பாதி காரணம் தட்ப வெப்ப நிலை மாற்றமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
அனைவருக்கும் போதிய உணவை வழங்க இவ்வுலகால் இயலும் எனினும், மொத்த மக்கள் தொகையில் ஏழுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் இன்று மக்கள் பசியால் வாடுவது கவலை தருவதாக உள்ளது எனவும் கூறுகிறது OXFAM பிறரன்பு அமைப்பு.
உலகில் உணவுப்பொருட்களின் விலை கடந்த ஆண்டை விட 36 விழுக்காடு அதிகரித்துள்ளதாக உலக வங்கி ஏற்கனவே எச்சரித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.