2011-05-31 15:51:54

இயேசுவை இறைவாக்கினராக மட்டும் காட்டும் ஆஸ்திரேலிய விளம்பரம் அகற்றப்படுமாறு ஆயர் விண்ணப்பம்


மே 31, 2011. 'இயேசு, இஸ்லாமியரின் இறைவாக்கினர்' என்ற வாசகத்துடன் ஆஸ்திரேலியாவின் சிட்னி அருகே சில பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் அகற்றப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் அந்நாட்டு ஆயர் ஒருவர்.
இஸ்லாமும் இயேசுவை ஓர் இறைவாக்கினராக ஏற்று அவரை நம்புகிறது என்பதை வெளிப்படுத்தி இருதரப்பினரிடையே உறவை வளர்க்கவே இத்தகைய விளம்பரத்தை வைத்ததாக இஸ்லாமியக் குழு ஒன்று அறிவித்துள்ள போதிலும், இந்த வாசகங்கள் கிறிஸ்தவ நம்பிக்கைகளைப் புண்படுத்துவதாக உள்ளதாக அறிவித்தார் சிட்னியின் துணை ஆயர் ஜூலியன் போர்தெயோஸ் (Julian Porteous).
இறைமகனாகிய இயேசு, ஆண்டவரும் மனித குல மீட்பருமாக நோக்கப்படுவதை மறுப்பதாக இவ்விளம்பர வாசகம் உள்ளதாக ஆயர் தெரிவித்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.