2011-05-26 15:47:34

மே 27 வாழ்ந்தவர் வழியில்.....


சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு, இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடியாவார். அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான இவர், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னான காலத்தில் அகில உலக அரசியலில் மிக முக்கிய நபரானார். வழக்குரைஞரும், செல்வந்தரும், அரசியல்வாதியுமான, மோதிலால் நேருவின் மகனான நேரு, மிக இளம் வயதிலேயே இந்திய தேசிய காங்கிரஸின் இடது சாரித் தலைவரானார். மகாத்மா காந்தியின் வழிகாட்டுதலின் கீழ் காங்கிரஸின் தலைவரானார். இவர் துடிப்புமிக்க மற்றும் புரட்சித் தலைவராக, ஆங்கில அரசின் பிடியிலிருந்து முழுமையான சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்தினார். 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி புதுடில்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனி கெளரவம் நேருவுக்கு கொடுக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவின் பழமையையும், அமைப்பையும் செதுக்க அவருடைய நீண்டகாலப் பதவி ஒரு கருவியாகப் பயன்பட்டது. சில சமயங்களில் இவரை "நவீன இந்தியாவின் சிற்பி" என்று குறிப்பிடுவதுண்டு. பாரத இரத்னாமாகிய ஜவகர்லால் நேரு 1889ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி பிறந்து 1964ம் ஆண்டு மே 27ம் தேதி காலமானார். சிறார் மீது தனிப்பிரியம் கொண்ட இவரை சிறார் நேரு மாமா என்று அழைக்கின்றனர். இவரது பிறந்த நாள் இந்தியாவில் குழந்தைகள் தினமாகவும் கடைபிடிக்கப்படுகிறது. இவர் இறக்கும்வரை வரை பிரதமர் பதவியை வகித்து வந்தார்.








All the contents on this site are copyrighted ©.