2011-05-25 16:32:51

மே 26, 2011.. – வாழ்ந்தவர் வழியில்........,


இரஷ்ய மொழியில் காதல் காவியங்கள் படைத்த ஒரு சிறந்த எழுத்தாளர் அலெக்சாண்டார் புஸ்கின். இவர் நவீன இரஷ்ய இலக்கியத்தின் காரணகர்த்தாவாகவும், மிகப்பெரிய கவிஞராகவும் பலராலும் கருதப்படுகிறார். புஸ்கின் தனது கவிதைகளிலும் நாடகங்களிலும் உரைநடையைக் கையாள்வதில் முன்னோடியாக இருந்தார். அத்துடன் இரஷ்ய இலக்கியத்தில் ஒரு தனித்துவமான கதைசொல்லும் பாணியியையும் உருவாக்கியிருந்தார். இவரது பாணி முன்னெப்போதும் இல்லாத அளவில் பிற்கால இரஷ்ய எழுத்தாளர்களிடம் மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்தியது. அலெக்சாண்டார் புஸ்கினின் முதல் கவிதை அவரின் 15ம் வயதில் வெளியிடப்பட்டது. சமூகச் சீர்திருத்தஙகளில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த இவர், தீவிர இலக்கியவாதிகளின் குரலாகவும் செயல்பட்டார். இதனால் கோபமுற்ற அரசு, இவரைத் தலைநகரிலிருந்து இரஷ்யாவின் தென்பகுதிக்கு வெளியேற்றியது. இங்கும் இவர் தன் எழுத்துப் பணியைத் தொடர்ந்தார். 1799ம் ஆண்டு மாஸ்கோவில் பிறந்த எழுத்தாளர் அலெக்சாண்டார் புஸ்கின், 1837ம் ஆண்டு தன் 37ம் வயதில் காலமானார்.








All the contents on this site are copyrighted ©.