2011-05-25 16:26:00

2012ம் ஆண்டின் துவக்கத்தில் இந்தியக் கத்தோலிக்கப் பொதுநிலையினருக்கானப் பேரவை


மே 25,2011. இந்தியக் கத்தோலிக்கப் பொதுநிலையினருக்கானப் பேரவை 2012ம் ஆண்டின் துவக்கத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுநிலையினரின் பங்கு பற்றி இரண்டாம் வத்திக்கான் அவை பல உயர்ந்த கருத்துக்களை வெளியிட்டிருந்தாலும், இன்னும் பொதுநிலையினர் திருச்சபையில் ஆற்றும் பங்கு மிகக் குறைந்ததாகவே உள்ளது என்று அகில இந்திய கத்தோலிக்க ஒன்றியத்தின் தலைவர் Remy Denis கூறினார்.
1983ம் ஆண்டு வெளியான திருச்சபைச் சட்டச்சீர்திருத்தங்களில் பொதுநிலையினருக்கென இன்னும் அதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பது கூறப்பட்டிருந்தாலும், பொதுநிலையினர் இன்னும் திருச்சபையின் முழு அங்கங்களாக மாற வழிகளைத் தேடும் ஒரு முயற்சி இந்த பேரவை என்று Remy Denis மேலும் கூறினார்.
இந்தியாவின் 166 மறை மாவட்டங்களில் நிறுவப்பட்டுள்ள கத்தோலிக்கப் பொதுநிலையினர் சங்கங்களின் உறுப்பினர்கள் அண்மையில் நடத்திய ஒரு கூட்டத்தில் பொதுநிலையினருக்கான பேரவை குறித்து தீர்மானம் எடுத்தனர்.
திருச்சபையின் பணிகளில் இன்னும் அதிக அளவில் பொதுநிலையினர் ஈடுபடுவதற்கென அவர்கள் மேற்கொள்ளும் எந்த முயற்சியையும் இந்தியக் கத்தோலிக்கத் திருச்சபை வரவேற்கும் என்று இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் பேச்சாளர் அருள்தந்தை பாபு ஜோசப் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.