2011-05-24 14:09:40

மங்களூர் விமான விபத்தின் ஆண்டு நினைவுக்கென அனைத்து மதத்தினரின்ரும் சிறப்புச் செபங்கள்


மே 24, 2011. 158 பேரின் உயிரிழப்புகளுக்குக் காரணமான மங்களூர் விமான விபத்தின் ஓராண்டை அனைத்து மதத்தினரும் சிறப்புச் செபங்களுடன் இஞ்ஞாயிறன்று நினைவு கூர்ந்தனர்.
கடந்த ஆண்டு மே மாதம் 22ந்தேதி மங்களூரில் ஏர் இந்தியா விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில், துபாயிலிருந்து அதில் பயணம் செய்த 166 பேரில் 8 பேர் தவிர எனையோர் உயிரிழந்தனர். அவ்விபத்தின் ஒராண்டு நினைவாக, விபத்துக்குள்ளானவர்களுக்காக செபிக்கும் நோக்கில் இயேசு சபையினர் ஏற்பாடு செய்திருந்த திருப்பலியில் ஏறத்தாழ 1000 பேர் கலந்துகொண்டனர்.
சனிக்கிழமையன்று, பல்வேறு மதங்களின் ஒன்றிணைந்த செபக்கூட்டமும் ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்தது.
தப்பெண்ணங்களாலும் பகைமையாலும் மக்கள் பிரிந்து வாழ்ந்த ஒரு காலக்கட்டத்தில் இவ்விபத்து அனைத்து மதத்தினரையும் ஒன்று சேர்த்துக் கொண்டு வர உதவியுள்ளது என்றார் இஸ்லாமிய மதக் குரு ஜானப் அப்துல் காதர்.
இவ்விபத்தில் இறந்த 23 குழந்தைகளின் நினைவை கௌரவிக்கும் விதமாக மங்களூரின் குழந்தைகள் ஒன்றிணைந்து விபத்துப் பகுதியில் மலர் அஞ்சலி செலுத்தினர்.








All the contents on this site are copyrighted ©.