2011-05-24 14:05:32

திருப்பீடத்திற்கும் குரவேசியாவிற்கும் இடையே கல்வி குறித்து ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் அமுலுக்கு வந்துள்ளது


மே 24, 2011. திருப்பீடத்திற்கும் குரவேசியாவிற்கும் இடையே 15 ஆண்டுகளுக்கு முன்னர் கல்வி மற்றும் கலாச்சாரம் குறித்து இசைவு அளிக்கப்பட்ட ஒப்பந்தம் அமுலுக்கு வருவதற்கான ஏட்டில் இத்திங்களன்று அந்நாட்டு ஆயர் பேரவைத்தலைவரும் பிரதமரும் கையெழுத்திட்டனர்.
குரவேசிய ஆயர் பேரவைத்தலைவர் பேராயர் Marin Srakic மற்றும் பிரதமர் Jadranka Kosor ஆகியோரிடையே தற்போது கையெழுத்திடப்பட்டு அமுலுக்கு வந்துள்ள இவ்வொப்பந்தத்தின் மூலம் தலத்திருச்சபை, மக்களின் தேவைகளுக்கு ஏற்ப கல்விக்கூடங்களை திறக்கும் உரிமையைப் பெற்றுள்ளது.
ஏற்கனவே தலத்திருச்சபை இந்நாட்டில் 12 மேல்நிலை பள்ளிகளையும், இரு ஆரம்பக் கல்விக்கூடங்களையும் 48 பாலர் பள்ளிகளையும் நடத்தி வருகிறது.








All the contents on this site are copyrighted ©.