2011-05-23 16:38:34

சீனாவில் முதியோரின் எண்ணிக்கை அதிகரித்தும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்தும் வருகிறது


மே 23, 2011. சீனாவில் முதியோரின் எண்ணிக்கை அதிகரித்தும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்தும் வருவதால், 'குடும்பத்திற்கு ஒரு குழந்தை' என்ற கொள்கையில் அரசு மாற்றம் கொண்டு வர வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாக செய்தி நிறுவனங்கள் கருத்து தெரிவிக்கின்றன.
சீனாவில் 2000மாம் ஆண்டில் 127 கோடியாக இருந்த மக்கள்தொகை 2010ம் ஆண்டில் 134 கோடியாக உயர்ந்துள்ளபோதிலும், மக்கள் தொகைப் பெருக்க விகிதம் 1.07 விழுக்காடு என்பதிலிருந்து 0.57 விழுக்காடாகக் குறைந்துள்ளதாக அந்நாட்டின் அண்மை மக்கள்தொகை கணக்கெடுப்பு மூலம் தெரிய வந்துள்ளது.
சீனாவில் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 23 விழுக்காடாக இருந்தது, தற்போது 16.6 விழுக்காடாக குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் பெண்கள் கருவிலேயேக் கொல்லப்படுவதால், அந்நாட்டின் மக்கள் தொகையில் பெண்களைவிட ஆண்களின் எண்ணிக்கை 3கோடியே 40 இலட்சம் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.