2011-05-20 15:52:41

ஜார்கண்ட், பீகார், ஒரிசா மற்றும் அந்தமான் ஆயர்கள் திருத்தந்தையுடன் சந்திப்பு


மே 20,2011. ஐந்தாண்டிற்கு ஒருமுறை இடம் பெறும் 'அட் லிமினா' சந்திப்பையொட்டி உரோம் நகர் வந்துள்ள ஜார்கண்ட், பீகார், ஒரிசா மற்றும் அந்தமான் ஆயர்களை இவ்வெள்ளியன்று காலை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ஏற்கனவே இத்திங்களன்று காலை வடகிழக்கு இந்தியா, பீகார், ஜார்கண்ட், அந்தமான் நிக்கோபார், ஒரிசா மற்றும் மேற்கு வங்கத்தின் ஆயர்களை ஒரே குழுவாக திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கியுள்ள திருத்தந்தை, அவர்களுள் எட்டு இந்திய திருச்சபைத் தலைவர்களை தனிக்குழுவாக, இவ்வெள்ளி காலை சந்தித்து அவர்களுடன் அந்தந்த மறைமாவட்டங்கள் குறித்து உரையாடினார்.கட்டக் புபனேஸ்வர் பேராயர் ஜான் பார்வா, அந்த உயர் மறைமாவட்டத்தின் ஓய்வு பெற்ற பேராயர் ரஃபேல் சீனத், குந்தி ஆயர் ஸ்டீஃபன் டிரு, போர்ட் ப்ளெய்ர் ஆயர் அலெய்க்சொ தாஸ் நேவிஸ் டயஸ், சிம்டெகா ஆயர் வின்சென்ட் பார்வா, பெட்டியா ஆயர் ஹென்றி தாகூர், பகல்பூர் ஆயர் குரியன் வலியக்கண்டத்தில், புக்சார் ஆயர் செபஸ்தியான் கல்லுப்புறா ஆகியோர் திருத்தந்தையைச் சந்தித்து உரையாடினர்.







All the contents on this site are copyrighted ©.