2011-05-19 15:32:48

ஜப்பானில் ஒருமைப்பாட்டின் சுனாமி காணப்படுவதாக உரைக்கிறார் கர்தினால் சாரா.


மே 19,2011. கடந்த மார்ச் மாதத்தில் ஜப்பானில் 14,000 பேரின் உயிர்களை பலிவாங்கிய நில அதிர்ச்சி மற்றும் சுனாமியின் பாதிப்புகளைத் தொடர்ந்து தற்போது அந்நாட்டில் ஒருமைப்பாட்டு உதவிகளின் சுனாமியைக் காணமுடிகிறது என்றார் கர்தினால் ராபர்ட் சாரா.
ஜப்பானில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட திருத்தந்தையின் சார்பில் சென்ற திருப்பீடத்தின் 'கோர் ஊனும்' உதவி அமைப்பின் தலைவர் கர்தினால் சாரா, சர்வதேச காரித்தாஸ் அமைப்பின் மூலம் சிறப்பான பணிகளை இம்மக்களிடையே திருச்சபை ஆற்றி வருகின்றது என்றார்.
பாதிக்கப்பட்ட மக்களுள் 10,000க்கும் மேற்பட்டோருக்கு ஜப்பான் காரித்தாஸ் அமைப்பு, உணவு, போர்வைகள் மற்றும் அத்தியாவசியப்பொருட்களை அண்மை வாரங்களில் வழங்கி வருவதாகவும் மேலும் கூறினார் கர்தினால் சாரா.








All the contents on this site are copyrighted ©.