2011-05-19 15:32:22

அமெரிக்க கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் சீனப்பொருட்களுக்கு தடை


மே 18, 2011. தொழிற்சங்கங்கள் சுதந்திரமாகச் செயல்பட சீனாவில் அனுமதி மறுக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அந்நாட்டுப் பொருட்களைத் தன் வளாகத்திற்குள் விற்பனைச் செய்ய தடை விதித்துள்ளது அமெரிக்க ஐக்கிய நாட்டின் நோத்ருதாம் கத்தோலிக்கப் பல்கலைக்கழகம்.
சீனாவில் தொழிலாளர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்தத் தடைகளை முன்வைப்பதாக அப்பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சீனாவின் மனித உரிமை நிலைகள் குறித்து தொடர்ந்து குற்றஞ்சாட்டிவரும் அமெரிக்க ஐக்கிய நாட்டு செனட் அவை அங்கத்தினர்கள் சிலர், இந்தக் கத்தோலிக்கப் பலகலைக்கழகத்தின் நிலைப்பாட்டிற்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
நோத்ருதாம் பலகலைக்கழகத்தின் இந்த நிலைப்பாடு மிகவும் முக்கியமானது என தன் பாராட்டுதல்களை வெளியிட்ட விர்ஜீனியாவிற்கானப் பிரதிநிதி ஃப்ராங்க் ஊல்ஃப், இத்தகையத் தடைகளை விர்ஜீனியா மாநிலத்திலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும் அமுல்படுத்தவேண்டும் என வலியுறுத்த உள்ளதாகத் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.