2011-05-18 16:05:58

அனைத்துலக காரித்தாஸ் அமைப்பின் 60ம் ஆண்டு நிறைவு


மே 18,2011. கத்தோலிக்கத் திருச்சபையின் அன்பைப் பறைசாற்றும் ஒரு முக்கிய அடையாளமாக அனைத்துலக காரித்தாஸ் அமைந்துள்ளதென்று காரித்தாஸ் தலைவர் கர்தினால் Oscar Rodriguez Maradiaga கூறினார்.
இம்மாத இறுதியில் உரோமை நகரில் நடைபெற உள்ள அனைத்துலக காரித்தாஸின் 19வது பொது அவை கூட்டத்தைப் பற்றி அறிவித்த கர்தினால் Maradiaga, இந்தப் பொது அவையின்போது, அனைத்துலகக் காரித்தாஸ் அமைப்பின் 60ம் ஆண்டு நிறைவும் கொண்டாடப்படும் என்று கூறினார்.
கத்தோலிக்கத் திருச்சபையில் பிறரன்புப் பணிகளில் ஈடுபாட்டிருந்த 13 தனித் தனி அமைப்புக்களை ஒன்றிணைத்து, 1951ம் ஆண்டு அனைத்துலகக் காரித்தாஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது. பல்வேறு நாடுகளின் ஆயர் பேரவை அங்கத்தினர்களையும், ஏனைய பிறரன்புப் பணி நிறுவனங்களின் உறுப்பினர்களையும் உள்ளடக்கிய இந்த அமைப்பில் தற்போது 163 உறுப்பினர்கள் உள்ளனர்.'ஒரே மனித குடும்பம், பூஜ்யமாகும் வறுமை' என்பது மே மாத இறுதியில் நடைபெறும் பொது அவையின் மையப் பொருள் என்று கூறிய கர்தினால் Maradiaga, ஒடுக்கப்பட்டோர் பல வழிகளில் அநீதிகளைச் சந்திக்கும் இன்றைய உலகில் அனைத்துலகக் காரித்தாஸ் அமைப்பின் பொறுப்பு ஒவ்வொரு ஆண்டும் கூடிவருகிறது என்றும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.