2011-05-14 16:32:54

மே 15, வாழ்ந்தவர் வழியில்...


பூமிக்கு மேல் அடுக்கு மாடி கட்டிடங்கள் கம்பீரமாய் எழுந்து நிற்பதற்கு முன், பூமிக்கடியில் பல நூறு உறுதியான கற்கள் புதைக்கப்பட வேண்டும். புதைக்கப்பட்ட அந்தக் கற்களை யாரும் எண்ணிப் பார்ப்பதில்லை.
அதேபோல், சமுதாயம் என்ற மாபெரும் கோபுரம் உயர்ந்து நிற்க, குடும்பம் என்ற உறுதியான அடித்தளம் அமைய வேண்டும். பொதுவாக, குடும்பம் என்ற அமைப்பு சமுதாயத்தின் கவனத்தை ஈர்க்காமல், அமைதியாக ஆழமாகச் செயல்படும். குடும்பங்கள் சரிவரச் செயல்படாவிடில், சமுதாயம் நிலைகுலைந்து போகும்.
இன்று மேமாதம் 15ம் தேதி... அனைத்துலக குடும்பங்களின் நாள். அனைத்துலகையும் ஒரு பெரும் குடும்பமாக எண்ணி இந்த நாளைக் கொண்டாடலாம். அல்லது, உலகிலுள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் பெருமையுடன் எண்ணி இந்த நாளைக் கொண்டாடலாம்.
சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதில் குடும்பங்களின் முக்கியப் பங்கை வலியுறுத்தும் வண்ணம் 1994ம் ஆண்டு ஐ.நா. பொது அவை அகில உலக குடும்ப ஆண்டை அறிவித்தது. 1995 முதல் மே மாதம் 15ம் தேதியை அனைத்துலக குடும்பங்களின் நாளாக உருவாக்கியது.
ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளுக்கென ஒரு மையக் கருத்தையும் ஐ.நா. வழங்கி வருகிறது. 2011ம் ஆண்டுக்கென ஐ.நா.குறிப்பிட்டுள்ள கருத்து: குடும்ப வறுமையையும், சமூகப் புறக்கணிப்பையும் எதிர்கொள்வது (Confronting Family Poverty and Social Exclusion)

கடந்த சில ஆண்டுகளில் குறிக்கப்பட்ட கருத்துக்கள்:
2006 - Changing Families: Challenges and Opporutunities
மாறிவரும் குடும்பங்கள்: சவால்களும் சந்தர்ப்பங்களும்
2007 - Families and persons with disabilities
குடும்பங்களும் மாற்றுத் திறனாளிகளும்
2008 - Fathers and Families: Responsibilities and Challenges
தந்தையரும் குடும்பங்களும்: பொறுப்புக்களும், சவால்களும்
2009 - Mothers and Families: Challenges in a Changing World
அன்னையரும் குடும்பங்களும்: மாறும் உலகின் சவால்கள்
2010 - The Impact of Migration on Families Around the Worldபுலம் பெயர்வால் குடும்பங்களில் உருவாகும் பாதிப்புக்கள்







All the contents on this site are copyrighted ©.