2011-05-14 16:42:40

எகிப்தில் பாதுகாப்புப் பணிகள் அதிகரிக்கப்பட அழைப்பு விடுக்கிறார் அந்நாட்டு ஆயர்


மே 14,2011. எகிப்தில் பாதுகாப்புப் பணிகள் அதிகரிக்கப்படாமல், இன்றைய வன்முறைத் தாக்குதல் நிலைகள் தொடர்ந்தால், அரசு தலைமையற்ற கிளர்ச்சிகளின் நாடாக அது மாறும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளார் அந்நாட்டு ஆயர் Antonios Aziz Mina.
கடந்த வாரம் எகிப்து தலைநகர் கெய்ரோவின் புறநகர் பகுதியில் வன்முறைகள் தலைதூக்கியபோது, இராவணுவமும் காவல்துறையும் அச்சத்தை வெளிப்படுத்தி கால தாமதமாகவேச் செயல்பட்டதைக் காணமுடிந்தது எனக் குற்றம் சாட்டினார் ஆயர்.
சட்டம் ஒழுங்கை மீண்டும் கொண்டுவருவது மட்டும் முக்கியமல்ல, அமைதியையும் ஒப்புரவையும் பெற வேண்டுமானால் முதலில் குற்றவாளிகள் நீதியின் முன் கொணரப்படவேண்டும் எனவும் கூறினார் ஆயர் Aziz Mina.








All the contents on this site are copyrighted ©.