2011-05-12 15:52:04

மே 13 வாழ்ந்தவர் வழியில்....


1648ம் ஆண்டு மே 13ம் தேதி டெல்லி செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது. இது யமுனா நதிக்கரையில், பெரும்பாலும் சுற்றிலும் சுவர்களைக் கொண்ட அகழியால் சூழப்பட்டுள்ளது. முகலாயப் பேரரசர் ஷாஜகான் 1638 ஆம் ஆண்டு இந்த மிகப்பெரிய கோட்டையைக் கட்டத் தொடங்கினார். 1648 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இந்தச் செங்கோட்டை உண்மையில், "குயிலா-ஐ-முபாரக்" அதாவது ஆசீர்வதிக்கப்பட்ட கோட்டை எனக் குறிப்பிடப்பட்டது, ஏனெனில் இது அரசக்குடும்பங்களின் வாழ்விடமாக இருந்தது. செங்கோட்டையின் தளவரைபடமானது சலிம்கர் கோட்டையின் தளத்துடன் ஒருங்கிணைத்து அமையும்படி அமைக்கப்பட்டிருந்தது. இது, இடைக்கால வரலாற்று நகரமான ஷாஜகானாபாத்தின் முக்கிய மையமாக இருந்தது. இந்தச் சுவரின் வடகிழக்குமுனை, 1546 ஆம் ஆண்டு இஸ்லாம் ஷா சுரியால் கட்டப்பட்டப் பாதுகாப்பு கோட்டையான சலிம்கர் கோட்டைக்கு அருகாமையிலிருக்கும்படி கட்டப்பட்டது சிப்பாய்க் கலகத்திற்குப் பிறகு, ஆங்கிலேயர் முகலாயக் கட்டடங்களை அழித்து, அவர்களது பாதுகாப்பு இல்லங்களைக் கட்டினர். இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னரும் 2003 ஆம் ஆண்டு வரையில் இந்தக் கோட்டையின் முக்கியமான பகுதி இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. இரண்டாவது உலகபோருக்குப் பின்னர், செங்கோட்டை இந்திய தேசிய இராணுவத்தின் புகழ் பெற்ற இராணுவ ஒத்திகை செய்யும் இடமானது. இது 2007 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டது. இங்கு இந்தியச் சுதந்திர நாளில் பிரதமரால தேசிய கொடி ஏற்றப்பட்டு உரை நிகழ்த்தும் வழக்கம் இன்றுவரை தொடர்கிறது.







All the contents on this site are copyrighted ©.