2011-05-12 15:35:15

பொது வாழ்வில் பணிகளை மேற்கொள்ள இலங்கையின் வட பகுதி பெண்களுக்குப் பயிற்சிகள்


மே 12,2011. இலங்கையின் வட பகுதிகளில் ஏற்பட்ட போரினால், ஆண்களின் எண்ணிக்கை அதிகமாகக் குறைந்திருப்பதால், அப்பகுதிகளில் பணிபுரியும் காரித்தாஸ் அமைப்பு, பொது வாழ்வில் பணிகளை மேற்கொள்ள பெண்களுக்குப் பயிற்சிகள் அளித்து வருகிறது.
போரில் உயிரிழத்தல், இடைக்கால முகாம்களில் தடுக்கப்படுதல், பிற நாடுகளுக்குச் செல்லுதல் ஆகிய காரணங்களால் வட பகுதியில் ஆண்களின் எண்ணிக்கை பெரிதும் குறைந்துள்ளதென்று காரித்தாஸ் பணியாளர்கள் கூறுகின்றனர்.
போரினால் கைம்பெண் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள பெண்கள் உட்பட வட பகுதியில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் கிள்ளிநொச்சிப் பகுதியில் பணிபுரியும் காரித்தாஸ் அமைப்பினர், பங்குத் தளங்கள் வழியாக, தலைமைத்துவப் பயிற்சிகள் அளித்து வருகின்றனர்.பெண்கள் என்றால் வீட்டில் மட்டுமே வேலை செய்பவர்கள் என்ற பரம்பரைக் கருத்தை விட்டு விலகி, இப்பெண்கள் சமுதாயத்தில் தலைமைத்துவப் பணிகளில் ஈடுபடவும், சட்டம் தொடர்பான விடயங்களிலும் அவர்களுக்குத் தேவையான வழிநடத்துதலைத் தரவும் காரித்தாஸ் முயற்சிகள் மேற்கொண்டுள்ளதென்று கிள்ளிநொச்சி காரித்தாஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் Arulanandam Johnaly Yavis கூறினார்.







All the contents on this site are copyrighted ©.