2011-05-11 16:53:41

பாலஸ்தீன நாட்டில் அண்மையில் உருவான அமைதி உடன்படிக்கை நம்பிக்கையை வளர்த்துள்ளது - WCC


மே 11,2011. பாலஸ்தீன நாட்டில் Fatah, Hamas ஆகிய இரு குழுக்களுக்கிடையே அண்மையில் உருவான அமைதி உடன்படிக்கை நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்கும் நம்பிக்கையை வளர்த்துள்ளதென்று உலகக் கிறிஸ்தவ அமைப்பு ஒன்று கூறியுள்ளது.
இஸ்ரேல், பாலஸ்தீனம் இருவருக்கும் இடையே பிரச்சனைகளை உருவாக்கி வரும் Gaza பகுதியில் ஒருங்கிணைந்த இடைக்கால அரசை உருவாக்கவும், மேற்குக் கரை மற்றும் Gaza பகுதிகளில் 2012ம் ஆண்டில் தேர்தல்கள் நடைபெறவும் ஒப்புதல் தரும் இந்த உடன்படிக்கையால், அப்பகுதியில் நீடித்த அமைதி உருவாகும் என்று நம்புவதாக WCC என்ற உலகக் கிறிஸ்தவக் குழுவின் தலைமை அலுவலகம் இச்செவ்வாயன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஒப்புரவையும், உரையாடலையும் வளர்க்கும் நோக்கில் WCC ஏற்பாடு செய்துள்ள ஓர் அனைத்துலக கருத்தரங்கு Jamaicaவில் உள்ள Kingston நகரில் இம்மாதம் 17 முதல் 25 வரை நடைபெற உள்ளது.உலகின் பல நாடுகளில் இருந்தும் இக்கருத்தரங்கில் கலந்து கொள்ளவிருக்கும் 1000க்கும் அதிகமான உறுப்பினர்கள், உலகில் அமைதியைக் கொணர்வதற்கு மதங்களும், கிறிஸ்தவ சபைகளும் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் குறித்து பேசுவர் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.