2011-05-11 16:53:56

நாசி வதை முகாமில் கொல்லப்பட்ட அருள்தந்தை Georg Hafner வருகிற ஞாயிறன்று அருளாளராக உயர்த்தப்படுவார்


மே 11,2011. 1942ம் ஆண்டு நாசி வதை முகாமில் கொல்லப்பட்ட அருள்தந்தை Georg Hafner வருகிற ஞாயிறன்று அருளாளராக உயர்த்தப்படுவார்.
புனிதர்நிலைப் படிகளுக்கான திருப்பீடப் பேராயத்தின் தலைவரான கர்தினால் Angelo Amato ஜெர்மனியின் Wurzburg நகரில் வருகிற ஞாயிறன்று திருத்தந்தையின் பிரதிநிதியாகக் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1900ம் ஆண்டு ஜெர்மனியின் Wurzburgல் பிறந்த Georg முதல் உலகப் போரின் இறுதியில், ஓராண்டு கட்டாய இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு, பின்னர் குருத்துவப் பயிற்சியை மேற்கொண்டார்.1924ம் ஆண்டு குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்ட Georg, தன் குருத்துவப் பணியில் ஆரவமாய் ஈடுபட்டார். அவரது ஆர்வத்தால் ஜெர்மானிய அரசுடன் மோதல்கள் உருவாயின. இவரை 1941ம் ஆண்டு நாசிப் படையினர் கைது செய்து, வதை முகாமுக்கு அனுப்பினர். அங்கும் இவர் அன்பு ஒன்றையே தன் சொல்லாலும், செயல்களாலும் வெளிப்படுத்தினார். நாசி வதை முகாமில் 1942ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் Georg Hafner கொல்லப்பட்டார்.







All the contents on this site are copyrighted ©.