2011-05-07 15:26:43

பான் கி மூன் : 2011ம் ஆண்டில் சனநாயகத்தைக் கட்டி எழுப்ப முயற்சிக்கும் நாடுகளுக்கு கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஓர் எடுத்துக்காட்டாக இருக்க முடியும்


மே07,2011. இருபது ஆண்டுகளுக்கு முன்னர் சனநாயகத்தை நோக்கிய புதிய அமைப்பு முறைக்குச் சென்ற மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் அனுபவங்கள் தற்போது அரபு நாடுகளுக்கு முக்கியமான பாடங்களைக் கற்றுத் தருகின்றன என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
2011ம் ஆண்டில் சனநாயகத்தைக் கட்டி எழுப்ப முயற்சிக்கும் நாடுகளுக்கு மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஓர் எடுத்துக்காட்டாக இருக்க முடியும் என்று பல்கேரியாவுக்கு மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில் கூறினார் பான் கி மூன்.
சோஃபியா நகரில் நடைபெற்ற நிருபர் கூட்டத்தில் இவ்வாறு உரைத்த ஐ.நா.பொதுச் செயலர், 1989ம் ஆண்டில் ஐரோப்பா எவ்வாறு சனநாயகத்தைத் தழுவியது என்பது, இந்த 2011ம் ஆண்டில் சனநாயகத்தை அமைக்க முயற்சிக்கும் நாடுகளுக்கு உதவியாக இருக்கும் என்று கூறினார்.







All the contents on this site are copyrighted ©.