2011-05-06 16:44:43

தென் கொரிய ஆயர் : கருக்கலைப்பு, கொலைகளிலே மிக மோசமானது


மே06,2011. கருக்கலைப்பு, சாதாரணக் கொலையைவிட மோசமானது, ஏனெனில் இது வாழ்வைப் பாதுகாக்க வேண்டிய பெற்றோராலும் மருத்துவராலும் நடத்தப்படுகின்றது என்று தென்கொரிய ஆயர் ஒருவர் கூறினார்.
மே மாதம் இறுதி ஞாயிறன்று கடைபிடிக்கப்பட்ட வாழ்வு ஞாயிறுக்கென செய்தி வெளியிட்ட கொரிய ஆயர் பேரவையின் உயிர்அறநெறியியல் பணிக்குழுத் தலைவர் ஆயர் Gabriel Chang Bong-hun இவ்வாறு குறை கூறினார்.
கருக்கலைப்பு, தன்னையே பாதுகாக்க இயலாத மனிதருக்கெதிரான கடும் குற்றமாகும், இதனைக் கேள்விக்கு உட்படுத்தாமல் கண்டிக்க வேண்டும் என்று ஆயர் Chang மேலும் கூறினார்.
தென்கொரியாவில் வாழ்வுக்கு ஆதரவான ஞாயிறு வழக்கமாக மே மாதம் இறுதி ஞாயிறன்று கடைபிடிக்கப்படு்ம். ஆனால் இவ்வாண்டு மே முதல் ஞாயிறன்று கடைபிடிக்கப்பட்டது.
தென்கொரியாவில் 2005ம் ஆண்டில் 4,40,000 குழந்தை பிறப்புகள் இடம் பெற்றன. ஆனால் அதே ஆண்டில் சட்டத்துக்குப் புறம்பே 3,41,000 கருக்கலைப்புகள் நடத்தப்பட்டன. 2009ல் 3,80,000 கருக்கலைப்புகள் நடத்தப்பட்டன என்று ஒரு கிறிஸ்தவ அரசு சாரா அமைப்பு அறிவித்தது.







All the contents on this site are copyrighted ©.