2011-05-05 15:51:57

பல்வேறு கலாச்சாரங்களையும், மதங்களையும் உள்ளடக்கிய இலங்கையை உருவாக்க முடியும் - மதத்தலைவர்கள்


மே 05,2011. இலங்கையில் பல்வேறு கலாச்சாரங்களையும், மதங்களையும் உள்ளடக்கிய ஒரு நாட்டை உருவாக்க முடியும் என்று மதத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுகளைக் கொண்டாடும் ஒரு முயற்சியாக Sabaragamuwa பகுதியில் அண்மையில் புத்தர்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் முஸ்லிம்கள் ஒன்று கூடி வந்தபோது, இக்கருத்து வெளியிடப்பட்டது.
"தேசிய ஒற்றுமைக்கான பல்சமய ஒருங்கிணைப்பு" என்ற ஓர் அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சியில் Colombo, Moratuwa, Gampaha, Kurunegala ஆகியப் பகுதிகளிலிருந்து பல சமயங்களையும் சேர்ந்த 2000 பேருக்கும் அதிகமாய் வந்து இக்கொண்டாட்டங்களில் கலந்து கொண்டனர்.மக்களிடையே ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் வளர்ப்பதற்கு திருவிழா நாட்களை எதிர்பார்த்துக் காத்திருக்கத் தேவையில்லை என்று புத்த மதத் தலைவரான Valavita Janananda Thero கூறினார்.







All the contents on this site are copyrighted ©.