2011-05-04 15:34:38

சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களுக்குத் திருத்தந்தை அனுப்பியுள்ள அனுதாபச் செய்தி


மே 04,2011. அண்மையில் சூறாவளிக் காற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களுக்குத் தன் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
அமெரிக்காவில் அலபாமா பகுதியில் ஏப்ரல் இறுதியில் வீசிய சூறாவளியால் 300 உயிர்கள் பலியாயின. அப்பகுதி பெரும் சேதங்களுக்கு உள்ளானது. இந்த இயற்கைப் பேரிடரைக் குறித்து திருத்தந்தையின் அனுதாபத்தை அலபாமா பேராயர் தாமஸ் ரோடிக்கு ஒரு தந்தி மூலம் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிஸியோ பெர்தோனே அனுப்பி வைத்தார்.
இந்த இயற்கைப் பேரிடரால் தங்கள் உறவுகளையும், வீடுகளையும் இழந்திருக்கும் மக்களுடன் தானும் செபத்தில் இணைந்திருப்பதாக திருத்தந்தை இத்தந்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இப்பேரிடரைப் போக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அமைப்புக்கள், பிறர்நல அமைப்புக்கள் அனைத்திற்கும் இறைவனின் அருள் கிடைக்க தான் செபிப்பதாகவும் திருத்தந்தை கூறியுள்ளார்.
1925ம் ஆண்டு அமெரிக்காவில் வீசிய சூறாவளியில் 695 இறந்தனர்; அதற்கு அடுத்தபடியாக, அண்மையில் வீசிய இந்தச் சூறாவளியே அதிக உயிர்களைப் பலி வாங்கியுள்ளதென்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது







All the contents on this site are copyrighted ©.