2011-05-02 15:27:53

வாரம் ஓர் அலசல்- “ஆஸ்துமா நோய்த் தடுப்பு தினம்”


மே02,2011. முல்லா நகைச்சுவையான பெரிய அறிவாளி. இவர் ஒரு நாள் தனது வீட்டு மாடி அறையை வெள்ளை அடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது மனைவி கீழ் வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தார். மாடியில் திடீரென டமால் என்று சத்தம் கேட்க.. மனைவி கத்தினார். என்ன அங்கே சத்தம்.
முல்லா மாடியிலிருந்து பதில் தந்தார். ஒன்றுமில்லை ஒன்றுமில்லை. ஏணியிலிருந்து என் வேட்டியும் சட்டையும் கீழே விழுந்து விட்டன. அவ்வளவுதான்.. என்றார். மீண்டும் அவரது மனைவி, வேட்டி சட்டை விழுந்தால் இவ்வளவு சத்தமா கேட்கும் என்று கத்தினார். அப்போது முல்லா நிதானமாகப் பதில் தந்தார். விழுந்த வேட்டி சட்டைக்குள் நான் இருந்தேன் என்றார்.
அன்பர்களே, துன்பம் வரும்போது கொஞ்சம் சிரித்துக் கொண்டால் உடலிலும் மனத்திலும் பாரம் குறையும். துன்பப்படுவதால் ஏற்படும் மனஅழுத்தங்களும் பதட்டங்களும் அதனால் உருவாகும் நோய்களும் குணமடையும். உலகில், ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் முதல் செவ்வாய்க்கிழமை ஆஸ்துமா நோய்த் தடுப்பு உலக நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளையொட்டி ஆஸ்துமா ஏற்படக் காரணம், அதற்கான சிகிச்சைகள், அது வராமல் தடுக்கும் முறைகள் குறித்துத் தொலைபேசி வழியாகப் பேசுகிறார் அருட்சகோதரி ஜோஸ்பின். தாதியரான இச்சகோதரி திருச்சி மரியின் ஊழியர் சபையைச் சேர்ந்தவர். RealAudioMP3
ஆஸ்துமா நோய் குறித்துப் பேசியவர் அருட்சகோதரி ஜோஸ்பின். மரியின் ஊழியர் சபை, திருச்சி. அன்பர்களே, மனித வாழ்க்கை நமக்குக் கடவுள் கொடுத்த வரம்! அதை வரமாக வாழ்வது நம் கையில்தான் இருக்கின்றது. எனவே நோய்நொடியின்றி வாழ முயற்சிப்போம். இந்த வாழ்க்கை வரத்தைப் பேணிப் பாதுகாப்போம்!''








All the contents on this site are copyrighted ©.