2011-04-30 15:51:04

புகைபிடிப்பதால் இந்த நூற்றாண்டில் சுமார் நூறு கோடிப்பேர் இறக்கக்கூடும், ஐ.நா.அதிகாரி எச்சரிக்கை


ஏப்ரல்30,2011. உலகில் புகைபிடிக்கும் தற்போதைய நிலை தொடர்ந்து நீடித்தால் இந்த நூற்றாண்டில் சுமார் நூறு கோடிப்பேர் இறக்கக்கூடும் என்று ஐ.நா.நலவாழ்வு அமைப்பின் மூத்த அதிகாரி Douglas Bettcher எச்சரித்தார்.
புகைத்தல் அல்லது புகைபிடிக்கும் இடங்களில் இருத்தல் காரணமாக ஏற்படக்கூடிய இறப்புக்கள் பற்றி எச்சரித்த அவர், புகைத்தலைத் தடுப்பதற்குக் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் வருங்காலம் ஒரு பேரழிவை எதிர்நோக்கக்கூடும் என்றார்.
தற்போது இப்பிரச்சனையால் ஆண்டுதோறும் அறுபது இலட்சம் பேர் இறக்கின்றனர்.
இரஷ்யாவில் நடைபெற்று வரும் நலவாழ்வு குறித்த அனைத்துலக கருத்தரங்கில் இதனை அறிவித்தார் Bettcher







All the contents on this site are copyrighted ©.