2011-04-28 15:57:08

7. லிபியாவில் தாக்குதல்கள் நிகழ்ந்தபோதிலும், மக்கள் கோவில்களில் நிறைந்திருந்தனர் - பேராயர் Martinelli


ஏப்ரல் 28,2011. உயிர்ப்புத் திருநாளுக்கு அடுத்த நாள் திங்களன்று லிபியாவின் பல இடங்களில் குண்டு தாக்குதல்கள் நிகழ்ந்தபோதிலும், மக்கள் கோவில்களில் நிறைந்திருந்தது கிறிஸ்தவ விசுவாசத்திற்கு சிறந்த ஒரு சாட்சியாக இருந்ததென்று Tripoliயின் அப்போஸ்தலிக்க நிர்வாகி பேராயர் Giovanni Innocenzo Martinelli கூறினார்.
கோவில்களுக்கு வரும் கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையினர் பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கூறிய பேராயர், இவர்கள் செபிக்க மட்டுமின்றி, வழிபாட்டிற்குப் பின் மக்களைச் சந்தித்து, அவர்களிடம் நம்பிக்கையை வளர்க்கவும் கோவிலுக்கு வருகின்றனர் என்று வத்திக்கான் FIDES செய்தி நிறுவனத்திற்கு இப்புதனன்று அளித்த பேட்டியில் கூறினார்.லிபியாவின் பிரச்சனைக்கு ஐ.நா.உட்பட அனைத்துத் தரப்பினரும் போரையும், ஆயுதங்களையும் நம்பியிருப்பது பெரும் ஏமாற்றம் அளிக்கிறதென்று கூறிய பேராயர் Martinelli, வன்முறைகள் எக்காலத்திலும் மனித குலத்திற்கு தீர்வுகளைக் கொண்டு வரமுடியாது என்றுரைத்தார்.







All the contents on this site are copyrighted ©.