2011-04-27 16:42:06

தலாய் லாமாவைத் தொடர்ந்து திபெத்து அரசின் அடுத்தப் பிரதமர் தெரிவு


ஏப்ரல் 27,2011. திபெத்து நாட்டின் சொந்த மண்ணுக்கு வெளியில் இருந்து இயங்கும் அரசின் அடுத்தப் பிரதமராக ஹார்வர்ட் பல்கலை கழகத்தில் பணிபுரியும் Lobsang Sangay தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று இவ்வரசு இப்புதனன்று அறிவித்துள்ளது.
500 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க திபெத்து நாட்டின் 14வது தலைவராகத் தெரிவு செய்யப்பட தலாய் லாமா அண்மையில் தான் இந்தப் பொறுப்பில் இருந்து விலக உள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து Sangay தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
Sangayன் தெரிவு பற்றிய செய்தி அனைத்து மக்களாலும் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளதென்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
சீன அரசின் ஆதிக்கத்திற்குக் கீழ் வைக்கப்பட்டுள்ள திபெத்து பகுதியில் மக்கள் தங்களுக்கு உரிய தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெற வேண்டும் என்று பல ஆண்டுகளாகப் போராடி வந்தவர் தலாய் லாமா.
உலக சமாதானத்திற்கான நொபெல் பரிசைப் பெற்றுள்ள தலாய் லாமாவின் பதவியையும் அவரது முயற்சிகளையும் சீன அரசு இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை.75 வயது நிறைந்த தலாய் லாமாவை வெறும் அரசியல் தலைவராக மட்டும் மக்கள் பார்க்கவில்லை, அவரை ஒரு உயர்ந்த ஆன்மீகத் தலைவராகவும் மக்கள் கண்டு வந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.







All the contents on this site are copyrighted ©.