2011-04-25 14:40:04

மே 7,8 தேதிகளில் திருத்தந்தை வெனிஸ் நகருக்குத் திருப்பயணம் மேற்கொள்கிறார்


ஏப்ரல்25,2011. வருகிற மே 7,8 தேதிகளில் வெனிஸ் நகருக்குத் தான் மேய்ப்புப்பணித் திருப்பயணம் மேற்கொள்ளவிருப்பதையும் இவ்வுரையில் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இத்திங்களன்று திருச்சபை கிழக்கிலும் மேற்கிலும் நற்செய்தியாளர் புனித மாற்குவின் திருவிழாவைச் சிறப்பிக்கின்றது, இவர் வெனிஸ் நகரின் பாதுகாவலர், இறைவனுக்கு விருப்பமானால், மே 7 மற்றும் 8 ம் தேதிகளில் வெனிஸ் நகரத்தில் மேய்ப்புப்பணிப் பயணத்தை மேற்கொள்வேன் என்பதை இந்த நாளில் அறிவிக்கிறேன், உயிர்த்த கிறிஸ்து நமக்குத் தந்துள்ள பணியை விசுவாசம் மற்றும் மகிழ்ச்சியுடன் செய்வதற்கு அன்னைமரியா உதவுவாராக என்றும் கூறினார் அவர்.








All the contents on this site are copyrighted ©.