2011-04-20 15:11:12

தெற்கு ஆசியாவில் கிராமப்புற ஏழ்மையைக் குறைக்க வேளாண்மையில் அதிக முதலீடுகள் போடுவது அவசியம் - IFAD


ஏப்ரல்20,2011. ஆசிய-பசிபிக் பகுதியில் வறுமையை ஒழிப்பதற்கு அப்பகுதி நாடுகள் பரவலாக முயற்சிகள் எடுத்து வருகின்ற போதிலும், தெற்கு ஆசியாவில் கிராமப்புற ஏழை மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது என்று ஐ.நா.நிறுவனம் இச்செவ்வாயன்று கூறியது.
தெற்கு ஆசியாவில் வேளாண்மையில் அதிக முதலீடுகளைப் போடுவதன் மூலம் அப்பகுதியில் காணப்படும் கடும் கிராமப்புற ஏழ்மையைக் குறைக்க முடியும் என்று IFAD என்ற ஐ.நா.வின் வேளாண்மை வளர்ச்சிக்கான நிதி அமைப்பு பரிந்துரைத்தது.
வளரும் நாடுகளில் கிராமங்களில் காணப்பட்ட கடும் வறுமை கடந்த பத்து ஆண்டுகளில் 48 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடாகக் குறைந்துள்ளது என்றுரைத்த IFAD ன் ஆசிய-பசிபிக் பகுதிக்கான இயக்குனர் Thomas Elhaut, கடந்த பத்து ஆண்டுகளில் ஆசிய-பசிபிக் பகுதியில் 35 கோடிக்கு மேற்பட்டோர் ஏழ்மை நிலையிலிருந்து வெளிவந்துள்ளனர் என்றார்.
எனினும் ஆசிய-பசிபிக் பகுதியில் 68 கோடிக்கு மேற்பட்டோர் ஒருநாளைக்கு 1.25 டாலருக்குக் குறைவான ஊதியத்தில் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர், இவர்களில் 70 விழுக்காட்டினர் இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பாகிஸ்தானில் வாழ்கின்றனர் என்றார் Elhaut







All the contents on this site are copyrighted ©.