2011-04-20 15:06:29

இத்தாலியத் தொலைக்காட்சியில் இயேசு குறித்த கேள்விகளுக்குத் திருத்தந்தை பதில்


ஏப்ரல்20,2011. இத்தாலியத் தொலைக்காட்சியில் இப்புனித வெள்ளியன்று இயேசு குறித்தப் பொது மக்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லவிருக்கிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இத்தாலிய Rai Uno தொலைக்காட்சியின் “A Sua Immagine” என்ற நிகழ்ச்சியில் ஏப்ரல் 22ம் தேதி இவ்வெள்ளி பிற்பகல் 2.10 மணி முதல் 3.30 மணி வரை இயேசு பற்றிய கேள்விகளுக்குப் பதில் சொல்லவிருக்கிறார் திருத்தந்தை.
எலேனா என்ற ஏழு வயது ஜப்பானியச் சிறுமி, கோமா நிலையிலுள்ள தன் மகனுக்கு உதவி வரும் ஓர் இத்தாலியத் தாய், போரினால் பாதிக்கப்பட்ட ஐவரி கோஸ்ட் நாட்டு ஒரு முஸ்லீம் தாய், ஈராக்கில் நசுக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் போன்றோரது ஆறு கேள்விகளுக்குப் பதில் அளிப்பார் திருத்தந்தை.
ஜப்பானிய நிலநடுக்கத்தில் பல இறப்புக்களை நேரிடையாகப் பார்த்தவள் சிறுமி எலேனா







All the contents on this site are copyrighted ©.