2011-04-19 14:24:20

கொரிய மக்களின் நுகர்வுக் கலாச்சாரம் குறித்து கவலையை வெளியிட்டுள்ளார் அந்நாட்டுக் கர்தினால்.


ஏப்ரல் 19, 2011. பொருளாதார மற்றும் உலகாயுதச் செல்வங்களை அடிப்படையாகக் கொண்டதாய் வாழ்வு பற்றிய கொரிய மக்களின் கண்ணோட்டம் இருப்பதாகக் கவலையை வெளியிட்டுள்ளார் அந்நாட்டுக் கர்தினால் Nicholas Cheong Jin-suk.
கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழாவிற்கான சிறப்புச் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ள கர்தினால், நுகர்வுக் கலாச்சாரத்தால் இன்றைய சமூகம் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நம் வாழ்வின் இறுதி முடிவு மரணமல்ல என்பதை இயேசுவிடமிருந்து கற்றுள்ள கிறிஸ்தவர்கள், நீதி, உண்மை மற்றும் அன்பின் மூலம் அனைத்தையும் வெற்றி கொள்ள முடியும் என்பதை உலகிற்கு எடுத்துரைக்க கடமைப்பட்டுள்ளார்கள் எனத் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் Seoul பேராயர் கர்தினால் Cheong Jin-suk.








All the contents on this site are copyrighted ©.