2011-04-19 14:24:39

ஐவரி கோஸ்ட் நாட்டின் ஒரு நகரில் மட்டுமே 30,000பேர் கத்தோலிக்க மையத்தில் அடைக்கலம் தேடியுள்ளனர்.


ஏப்ரல் 19, 2011. ஐவரி கோஸ்ட் நாட்டின் உள்நாட்டுச் சண்டையால் Duekoue நகர் சலேசிய சபை மையத்தில் அடைக்கலம் தேடியிருக்கும் 30,000 அகதிகளும் மேலும் உதவிகள் கிடைக்காத நிலையில், காலரா நோயைப் பெறும் அபாயம் இருப்பதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.
47,000 மக்கள் தொகையைக் கொண்ட Duekoue நகரில் 800 பேர் மோதலில் உயிரிழந்துள்ளனர், 30, 000 பேர் இக்கத்தோலிக்க மையத்தில் அடைக்கலம் தேடியுள்ளனர்.
உணவு, குடிநீர், மருந்து மற்றும் கழிவறை வசதிகள் இல்லாமல் மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருவதாகவும், காலரா நோய் பரவும் ஆபத்து இருப்பதாகவும் சலேசிய சபை குரு விச்செந்தே குறுபெல்லி கூறினார்.
பாதுகாப்பின்மை காரணமாக சலேசிய மையத்தில் அடைக்கலம் தேடியுள்ள மக்கள், தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாமல் இன்னும் அச்சத்திலேயே வாழ்வதாகவும் அவர் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.