2011-04-16 15:45:42

கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழா ஒரே நாளில் கொண்டாடப்பட முயற்சி எடுக்குமாறு எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் அழைப்பு


ஏப்ரல் 16,2011 : இவ்வாண்டு கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழா கிழக்கு மற்றும் மேற்குத் திருச்சபைகளுக்கு ஒரே நாளில் இடம் பெறுகின்றது என்று கூறிய WCC என்ற உலக கிறிஸ்தவ சபைகள் அவையின் பொதுச் செயலர் Olav Fykse Tveit, இவ்வாண்டு கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாக் கொண்டாட்டம் தெளிவானக் கிறிஸ்தவ ஒன்றிப்புக் கொண்டாட்டமாக அமைவதற்கு ஆவன செய்யுமாறு கிறிஸ்தவர்களைக் கேட்டுள்ளார்
வருங்காலத்தில் ஒரே தேதியில் இப்பெருவிழா இடம் பெறுவதற்குக் கிறிஸ்தவர்கள் அனைவரும் உழைக்குமாறும் அவர் கேட்டுள்ளார்.
பெரும்பாலான ஆர்த்தடாக்ஸ் சபைகள் பயன்படுத்தும் ஜூலியன் நாட்காட்டி அல்லது கிரகோரியன் நாட்காட்டியை வைத்து கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழா தீர்மானிக்கப்படுவதால் இவ்விழா வெவ்வேறு ஞாயிறுகளில் சிறப்பிக்கப்படுகின்றது.
கடந்த பத்து ஆண்டுகளில் ஐந்து தடவைகள் இப்பெருவிழா ஒரே தேதியில் கடைபிடிக்கப்ட்டுள்ளது. வருங்காலத்தில் 2017 மற்றும் 2025ல் இப்பெருவிழா ஒரே தேதியில் சிறப்பிக்கப்படும்







All the contents on this site are copyrighted ©.