2011-04-16 15:46:38

ஐம்பதாயிரம் குடும்பங்களுக்கு ஜப்பானில் இழப்பீட்டு நிதி தர முடிவு


ஏப்ரல் 16,2011 : புக்குஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து வெளிப்பட்ட கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் பத்து இலட்சம் என் ஜப்பானியப் பணத்தைத் தற்காலிக இழப்பீடாக உடனடியாக வழங்க வேண்டும் என்று அந்த அணு மின்நிலையத்தை இயக்கி வரும் "டெப்கோ' நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது ஜப்பான் அரசு.
புக்குஷிமா டாய்ச்சி அணுமின் நிலையத்திற்கு முப்பது கிலோ மீட்டர் சுற்றளவில் வாழ்ந்த ஏறக்குறைய 48 ஆயிரம் குடும்பங்கள் இந்த இழப்பீட்டுத் தொகையைப் பெறத் தகுதி பெற்றதாக இருக்கின்றன என்று ஊடகங்கள் கூறுகின்றன.
இம்மாதம் 28ம் தேதி முதல் இந்த இழப்பீட்டு நிதியை வழங்க வேண்டும் என "டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனிக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இது குறித்துப் பேசிய டெப்கோ தலைவர் மசாடாகா ஷிமிஷு, "ஆட்குறைப்பு மற்றும் வெளிநாட்டுத் திட்டங்கள் குறைக்கப்பட்டு, அவற்றின் மூலம் சேமிக்கப்படும் பணத்தில் இழப்பீடு வழங்கப்படும், இழப்பீடு வழங்குவதில் பின்வாங்க மாட்டோம்' என்று தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.