2011-04-16 15:40:05

84வது பிறந்த நாளைக் கொண்டாடும் திருத்தந்தை 16ம் பெனடிக்டுக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து


ஏப்ரல் 16,2011 : ஏப்ரல் 16ம் தேதி இச்சனிக்கிழமையன்று தனது 84வது பிறந்த நாளைக் கொண்டாடிய திருத்தந்தை 16ம் பெனடிக்டுக்கு உலகத் திருச்சபை மற்றும் பல நாடுகளின் தலைவர்கள் தங்களது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத் திருத்தந்தைக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் தந்திச் செய்தியை அனுப்பியிருப்பதோடு கடந்த செப்டம்பரில் திருத்தந்தை பிரிட்டனுக்கு மேற்கொண்ட நான்கு நாள் பயணத்தின் பசுமையான நினைவுகளையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
வத்திக்கான் வானொலி இயக்குனரும் வத்திக்கான் தொலைகாட்சி நிலையத் தலைவரும் திருப்பீடப் பேச்சாளருமான இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி இம்மூன்று நிறுவனங்களின் சார்பாக நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 19ம் தேதி தனது பாப்பிறைப் பணியின் ஆறாம் ஆண்டையும் சிறப்பிக்கிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.