2011-04-15 15:35:54

சீனத் திருச்சபைக்கான திருப்பீட அவை வெளியிட்ட அறிக்கை குறித்து திருப்பீடப் பேச்சாளர்


ஏப்ரல் 15,2011. முறையான அனுமதியின்றி சீனத் திருச்சபையில் ஆயர் ஒருவர் திருநிலைப்படுத்தப்பட்டது, மற்றும் சீனத் திருச்சபை மீது தன் தலைமைத்துவத்தைப் புகுத்த முயலும் அவ்வரசின் முயற்சி ஆகியவைகளால் கடந்த சில மாதங்களாக சீனக் கத்தொலிக்கர்களிடையே குழப்பங்களும் பதட்ட நிலைகளும் நிலவி வருவதாகக் கூறினார் திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை Federico Lombardi.
முறையான அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்ட ஆயர் திருநிலைப்பாடு என்ற காயம் குணப்படுத்தப்பட்டு, திருத்தந்தையின் நம்பிக்கைக்குரியதாக சீனத் தலத் திருச்சபை மாறுவதுடன், தலத் திருச்சபை மீதான சீன அரசின் கட்டுப்பாடுகள் அகற்றப்பட வேண்டும் என்று அருள்தந்தை Lombardi கேட்டுக் கொண்டார்.சீனக் கத்தோலிக்க நிலைகள் குறித்து ஆராய திருத்தந்தையால் உருவாக்கப்பட்ட அவை அந்நாட்டு கத்தோலிக்கர்களுக்கு அண்மையில் அனுப்பியுள்ள செய்திபற்றி குறிப்பிட்டத் திருப்பீடப் பேச்சாளர், ஒருவர் மற்றவருக்கான மதிப்புடன் கூடிய பேச்சு வார்த்தைகளால் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என்றும், பேச்சு வார்த்தைகளுக்குத் திருப்பீடம் எப்போதும் தயாராகவே உள்ளதென்றும் எடுத்துரைத்தார்.







All the contents on this site are copyrighted ©.