2011-04-13 16:08:20

இயற்கைப் பேரழிவுகள் ஜப்பான் நாட்டு மக்களை மீண்டும் ஆன்மீக வழிகளுக்குத் திருப்பியுள்ளது டோக்யோவில் பணி புரியும் இறைபணியாளர்


ஏப்ரல் 13, 2011. ஜப்பான் சந்தித்துள்ள இயற்கைப் பேரழிவுகள் அந்நாட்டு மக்களை மீண்டும் ஆன்மீக வழிகளுக்குத் திருப்பியுள்ளதென்று டோக்யோ நகரில் பணி புரியும் இறைபணியாளரான அருள்தந்தை Olmes Milani கூறியுள்ளார்.
ஜப்பானில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின்படி அங்கு வாழும் மக்களில் 86 விழுக்காட்டினர் மதங்களையும் ஆன்மீகத்தையும் நம்பாமல் வாழ்ந்தனர் என்பதைச் சுட்டிக்காட்டிய அருள்தந்தை Milani, இந்தப் பேரழிவுகளுக்குப் பின்னர் அங்குள்ள புத்த, ஷிண்டோ, மற்றும் கிறிஸ்தவ கோவில்களில் செபிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதென்று கூறினார்.சுயநலத்தையே பெரிதுபடுத்தி வாழ்ந்து வந்த ஜப்பானிய மக்கள், இப்பேரிடர்களால் ஒற்றுமை, பிறரன்பு என்ற உயரிய பாடங்களைக் கற்று வருகின்றனர் என்றும், ஜப்பான் இனி பெரிதும் மாறும் வழிகள் தெரிகிறதென்றும் FIDES செய்திக்கு அளித்த பேட்டியில் அருள்தந்தை Milani கூறியுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.