2011-04-12 12:24:16

ஐவரி கோஸ்ட் நாட்டின் பதட்ட நிலைகளால் மக்கள் பாதிப்படைந்துள்ளது குறித்து தலத்திருச்சபை கவலை.


ஏப்ரல் 12, 2011. ஐவரி கோஸ்ட் நாட்டின் அண்மை பதட்ட நிலைகளால் மக்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாத நிலையில் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் ஒரு சூழல் உருவாகியுள்ளதாக கவலையை வெளியிட்டார் அந்நாட்டு ஆயர் பேரவைத்தலைவர் ஆயர் Laurent Akran Mandjo.
தற்போது அந்நாட்டு அரசுத்தலவர் Laurent Gbagbo கைதுச் செய்யப்பட்டுள்ள போதிலும் பதட்ட நிலைகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன என்றார் ஆயர்.
பல கடைகள் போரின் காரணமாக மூடப்பட்டுள்ளதால் மக்கள் பொருட்களை வாங்க முடியா நிலை உள்ளது எனவும் கூறினார் அவர்.
இதற்கிடையே, ஐவரி கோஸ்ட்டின் துன்பநிலைகள் குறித்து கவலையை வெளியிட்ட அந்நாட்டிற்கான திருப்பீடத்தூதுவர் பேராயர் Ambrose Madtha, உள்நாட்டு போரால் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ள மக்கள் Abidjan நகரின் அனைத்துப் பங்குத்தளங்களிலும் அடைக்கலம் தேடியுள்ளதாகத் தெரிவித்தார்.
ஏற்கனவே ஒரு இலட்சம் மக்கள் ஐவரி கோஸ்ட் நாட்டிலிருந்து லிபேரியாவிற்குள் அகதிகளாகப் புகுந்துள்ளதாக லிபேரியாவின் லூத்தரன் கிறிஸ்தவ சபை ஆயர் Sumoward Harris தெரிவித்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.