2011-04-12 12:25:44

இடைக்கால போர் நிறுத்தம் அமைதிக்கான நம்பிக்கை என்கிறார் லிபிய ஆயர்.


ஏப்ரல் 12, 2011. லிபியாவில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இடைக்காலப் போர்நிறுத்தம், அமைதிக்கான புதிய நம்பிக்கைகளைக் கொணர்ந்துள்ளதாக அறிவித்தார் Tripoliயின் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Giovanni Innocenzo Martinelli.
தற்போது இடைக்காலப் போர்நிறுத்தத்தைப் பெற்றுள்ள நாடு, இரண்டாவது கட்டமாக, இருதரப்பினரிடையேயான பேச்சுவார்த்தை மற்றும் ஆட்சிமாற்ற இசைவுக்குக் காத்திருக்கிறது என்றார் ஆயர். லிபியாவின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயலும் அனைத்து நல்முயற்சிகளுக்கும் லிபியக் கிறிஸ்தவர்களின் ஆதரவு என்றும் உண்டு என்ற ஆயர் மர்த்தினெல்லி, நாட்டின் அமைதிக்கென இஸ்லாமிய அமைப்புகளுடன் இணைந்து விண்ணப்பம் ஒன்றை தயாரித்து ஐ.நா. அமைப்புக்கு இப்புதனன்று அனுப்ப உள்ளதாகவும் அறிவித்தார். ஆயர் மர்த்தினெல்லியுடன் இணைந்து Tripoliயின் கிரேக்க ஆர்த்தடாக்ஸ், காப்டிக் ஆர்த்தடாக்ஸ், ஆங்கிலிக்கன் கிறிஸ்தவசபைகளும் இவ்விண்ணப்பத்தைத் தயாரித்துள்ளன.








All the contents on this site are copyrighted ©.