2011-04-09 14:52:48

டெலஸ்கோப் கருவி முதன்முறையாக காண்பிக்கப்பட்டதன் 400ம் ஆண்டு நிகழ்வுகள்


ஏப்ரல்09,2011. இத்தாலிய அறிவியலாளர் கலிலேயோ கலிலி, தான் கண்டுபிடித்த டெலஸ்கோப் என்ற தொலைநோக்கு கருவியை முதன்முறையாக, அக்காலத்தில் இத்தாலியின் கலாச்சார மையமாக இருந்த உரோம் நகரின் அறிவாளர்க்கு வெளிப்படையாகக் காண்பித்த 400ம் ஆண்டு நிகழ்வுகள் உரோம் அமெரிக்கக் கல்வி கழகத்தில் தொடங்கப்பட்டுள்ளன.
தற்போது அமெரிக்கக் கல்வி கழகம் அமைந்துள்ள இடத்திலுள்ள grassy குன்றில் 1611ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி கலிலேயோ நின்று தனது டெலஸ்கோப் கருவியைக் காண்பித்தார்.
இவ்வியாழனன்று தொடங்கியுள்ள இந்நிகழ்வுகளில் விசுவாசம், அறிவியல் போன்ற தலைப்புக்களில் விவாதங்கள் இடம் பெற்று வருகின்றன.







All the contents on this site are copyrighted ©.