2011-04-09 14:44:32

குவாஹாட்டி உயர்மறைமாவட்டத்திற்குப் புதிய வாரிசுரிமை பேராயர்


ஏப்ரல்09,2011. இந்தியாவின் குவாஹாட்டி உயர்மறைமாவட்டத்தின் வாரிசுரிமை பேராயராக, இந்நாள்வரை Diphu ஆயராகப் பணியாற்றிய ஆயர் John Moolachira ஐ இச்சனிக்கிழமை நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கேரளாவின் புதுச்சேரிகடவு என்ற ஊரில் 1951ம் ஆண்டு பிறந்த ஆயர் John Moolachira, 1978ம் ஆண்டு தேஜ்பூர் மறைமாவட்டத்திற்கென குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 2007ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி Diphu மறைமாவட்ட ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
அசாம் மாநிலத்தில் ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய குவாஹாட்டி உயர்மறைமாவட்டத்தில் 65 ஆயிரத்துக்கு அதிகமான கத்தோலிக்கர் வாழ்கின்றனர்.
குவாஹாட்டி வடகிழக்கு இந்தியாவுக்கு வாயில்கதவு என அழைக்கப்படுகிறது







All the contents on this site are copyrighted ©.