2011-04-08 16:02:29

எருசலேமில் ஆங்லிக்கன் ஆயர் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எருசலேம் கிறிஸ்தவ சபைத் தலைவர்கள் கண்டனம்


ஏப்ரல்08,2011. இஸ்ரேல் நாட்டு எருசலேமில் ஆங்லிக்கன் ஆயர் Suheil Dawani தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது மற்றும் ஆலயங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள புதிய வரிகள் குறித்து எருசலேமிலுள்ள எல்லாக் கிறிஸ்தவ சபைத் தலைவர்களும் தங்களது கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.
இஸ்ரேல் அதிகாரிகளின் இந்த நடவடிக்கைகள், ஐ.நா. விதிமுறைக்கு ஒத்து வராதது என்றும் இத்தகைய நடவடிக்கை இதுவரை ஒரு பொழுதும், ஏன் இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்ட போதுகூட இடம் பெற்றதில்லை என்றும் கிறிஸ்தவத் தலைவர்களின் அறிக்கை குறை கூறுகிறது.
முதுபெரும் தலைவர்கள், ஆயர்கள், புனிதபூமி காவலர் உட்பட எல்லாத் தலைவர்களும் இணைந்து வெளியிட்ட அறிக்கை, ஆங்லிக்கன் ஆயர் Dawani தனது குடும்பத்துடன் இந்தப் புனித நகரத்தில் தங்குவதற்கு உரிமையைக் கொண்டுள்ளார் என்று கூறுகிறது.
West Bank லுள்ள Nablus ல் பிறந்த ஆயர் Dawani, இஸ்ரேல் ஆக்ரமிப்பின் கீழுள்ள கிழக்கு எருசலேமில் வெளிநாட்டவராகக் கருதப்படுகிறார். இங்குதான் ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபை பேராலயமும் தலைமையகமும் இருக்கின்றன.







All the contents on this site are copyrighted ©.