2011-04-07 15:56:00

வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தின் கோபுரம் மிக உறுதி வாய்ந்ததாய் உள்ளது


ஏப்ரல் 07,2011. வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தின் கோபுரம் மிக உறுதி வாய்ந்ததாய் உள்ளதென்று ஆய்வுக் குழுவொன்று தன் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
புகழ்பெற்ற ஓவியரும் சிற்பியுமான மிக்கேலாஞ்சலோவால் வடிவமைக்கப்பட்டு, 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோபுரம் இக்காலத்திய கான்க்ரீட் கட்டிடங்களை விட வலுவுள்ளதென்று கூறியுள்ள இந்த ஆய்வறிக்கை, வத்திக்கான் நாளிதழான L'Osservatore Romano வில் இச்செவ்வாயன்று வெளியானது.
520 அடி உயரமுள்ள இந்தக் கோபுரம் இரு இரும்பு வளையங்களைக் கொண்டு கட்டப்பட்டதென்று இது வரை எண்ணப்பட்டது. ஆயினும் இந்த ஆய்வின்போது மேற்கொள்ளப்பட்ட சில நுண்ணிய முறைகளின் வழியே, இந்தக் கோபுரம் ஆறு இரும்பு வளையங்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதென்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.எனவே இந்தக் கோபுரத்தின் வடிவமைப்பு, மற்றும் கட்டப்பட்டுள்ள முறை ஆகியவை இக்கோபுரம் மிக உறுதி வாய்ந்தது என்பதை உணர்த்துகிரதென்று இவ்வறிக்கை கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.