2011-04-07 15:55:33

புனித அந்தோணியார் கோவில் உட்பட பல வரலாற்று சிறப்பு மிக்க கோவில்களை இலங்கை அரசு புதுப்பிக்கும் திட்டம்


ஏப்ரல் 07,2011. இலங்கையில் யாழ்ப்பாணத்தை அடுத்துள்ள கச்சத்தீவில் புகழ்பெற்ற புனித அந்தோணியார் கோவில் உட்பட பல வரலாற்று சிறப்பு மிக்க கோவில்களைப் புதுப்பிக்கப் போவதாக கலாச்சாரம் மற்றும் புராதான சின்னங்களைக் காக்கும் அரசுத் துறையின் அமைச்சர் அறிவித்துள்ளார்.
இவ்வரசுத் துறையின் அமைச்சர் T.B.Ekanayake இச்செவ்வாயன்று கர்தினால் மால்கம் இரஞ்சித்தைச் சந்தித்தபோது, அரசின் இத்திட்டம்பற்றிக் கூறினார்.
இலங்கையின் வளர்ச்சிக்கு கத்தோலிக்க சமயம் அளித்துள்ள பெரும் பங்கை அரசு உணர்ந்து, கத்தோலிக்க மற்றும் பிற மதங்களின் வழிபாட்டுத் தலங்களைப் புதுப்பிக்கவும், பாதுகாக்கவும் முன் வந்திருப்பது மகிழ்வைத் தருகிறதென்று கர்தினால் இரஞ்சித் கூறினார்.வழிபாட்டுத் தலங்களைக் காப்பதற்கு அரசு எடுத்துள்ள முயற்சிகளை இலங்கை ஆயர் பேரவைக்கு எடுத்துச் சொல்லி, முக்கியமான திருத்தலங்களைப் பட்டியலிட்டு, அரசுக்கு அறிவிக்குமாறு அமைச்சர் கர்தினால் இரஞ்சித்தைக் கேட்டுக் கொண்டார் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.