2011-04-04 17:04:25

பாகிஸ்தானில் அமைதி நிலவ பர்மிங்ஹாமில் சிறப்புத் திருப்பலி


ஏப்ரல் 04, 2011 பாகிஸ்தானில் அமைதி நிலவ வேண்டும் என்ற செப விண்ணப்பத்துடன் பிரிட்டனின் பர்மிங்ஹாம் பேராலயத்தில் பல முக்கிய அதிகாரிகளின் பங்கேற்புடன் இஞ்ஞாயிறு திருப்பலியை நிறைவேற்றினார் பேராயர் Bernard Longley.
பர்மிங்ஹாமின் மேயர், சுவீடன் ஆயர் Anders Arborelius, பாகிஸ்தானின் துணைத்தூதரக உயர் அதிகாரி Saeed Khan Mohmand எனமுக்கியமானோர் கலந்து கொண்டஇத்திருப்பலியில், பாகிஸ்தானின் அமைதிக்காகசிறப்பானவிதத்தில் செபிக்கப்பட்டதுடன், அண்மையில் கொலை செய்யப்பட்டகத்தோலிக்கஅமைச்சர் Shabhaz Bhatti யின் உருவப்படமும் திறந்து வைக்கப்பட்டிருந்தது.
அமைச்சர் Shabhaz Bhatti யின் மரணம், பாகிஸ்தான் நாட்டில் ஏனையகிறிஸ்தவர்கள் அனுபவிக்கும் துன்பம் மற்றும் அச்சத்தை நமக்கு நினைவூட்டுவதாகஉள்ளது எனஇத்திருப்பலியில் மறையுரையாற்றியபேராயர் Bernard Longley, அந்தஅமைச்சரின் தியாகம், பாகிஸ்தான் நாட்டிற்கு ஐக்கியம் எனும் கனியைக் கொணர்வதாகஎனவும் வேண்டினார்.
உலகம் முழுவதும் சமூகங்களைப் பிரித்து வரும் முரண்பாடுகளுக்கு அமைதித் தீர்வுகள் காணப்படவேண்டும் எனசெபிக்குமாறும் விசுவாசிகளுக்கு அழைப்பு விடுத்தார் பர்மிங்ஹாம் பேராயர்.








All the contents on this site are copyrighted ©.