2011-04-02 14:47:51

நிதி குறித்த வத்திக்கானின் புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன


ஏப்.02,2011. தனியாட்கள் வத்திக்கான் நாட்டிற்குள்ளும் நாட்டிற்கு வெளியேயும் பத்தாயிரம் யூரோக்களுக்கு அதிகமாக எடுத்துச் செல்லும் போது அதை அதற்குரிய அதிகாரிகளிடம் அறிவிக்க வேண்டும் என்று நிதி குறித்த வத்திக்கானின் புதிய விதிமுறைகள் கூறுகின்றன.
கருப்புப் பணம், பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்தல் ஆகியவற்றுக்கு எதிரான அனைத்துலக விதிமுறைகளோடு ஒத்திணங்கும் வகையில் வத்திக்கானில் இப்புதிய விதிமுறைகள் ஏப்ரல் முதல் தேதியன்று அமலுக்கு வந்துள்ளன.
இந்த விதிமுறைகளை மீறுகிறவர்களுக்கு சிறைத்தண்டனை உட்பட தண்டனைகள் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
வத்திக்கான் நாட்டிற்குள்ளும் நாட்டிற்கு வெளியேயும் எடுத்துச் செல்லப்படும் பத்தாயிரம் யூரோக்கள், பணத்தாள்களாகவோ நாணயங்களாகவோ அல்லது காசோலைகளாகவோ, எப்படியிருந்தாலும் அவை குறித்த விபரங்கள் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட வேண்டும்.







All the contents on this site are copyrighted ©.