2011-04-01 16:21:57

குஜராத் தலத்திருச்சபைத் தலைவர்கள் : மகாத்மா காந்தி பற்றிய புத்தகத்தைத் தடை செய்வது பேச்சு சுதந்திரத்திற்கு ஊறு விளைவிப்பதாய் இருக்கின்றது


ஏப்.01,2011: இந்தியாவில் மகாத்மா காந்தி பற்றிய புத்தகத்தைத் தடை செய்வதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் பேச்சுரிமைக்கு ஊறு விளைவிப்பதாய் இருக்கின்றது என்று குஜராத் தலத்திருச்சபைத் தலைவர்கள் குறை கூறினர்.
“மாபெரும் ஆன்மா: மகாத்மா காந்தியும் அவரது விடுதலைப் போராட்டமும்” (Great Soul: Mahatma Gandhi and his Struggle with India) என்ற தலைப்பில் Pulitzer விருது பெற்ற Joseph Lelyveld என்பவர் எழுதிய புத்தகம் விநியோகம் செய்யப்படுவதைத் தடை செய்வதற்கு குஜராத் அரசு திட்டமிட்டு வருகிறது.
அரசின் இந்நடவடிக்கை, இந்திய அரசியல் அமைப்பில் உறுதி வழங்கப்பட்டுள்ள பேச்சுரிமை மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கு முரணாக இருக்கின்றது என்று திருச்சபைத் தலைவர்கள் கூறினர்.
நமது நாட்டின் தந்தையை வெறுக்கத்தக்க விதத்தில் இந்தப் புத்தக ஆசிரியர் விமர்சித்துள்ளார் என்று குஜராத் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.