2011-03-31 16:00:39

மியான்மாரில் நிகழும் அரசு மாற்றங்கள் உண்மையான குடியரசை நோக்கிய மாற்றங்களாக இருக்க வேண்டும் : ஐ.நா. பொதுச்செயலர்


மார்ச் 31,2011. மியான்மாரில் நிகழும் அரசு மாற்றங்கள் உண்மையான குடியரசை நோக்கிய மாற்றங்களாக இருக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் கூறினார்.
மியான்மார் மக்கள் பல ஆண்டுகளாய் விரும்பி வரும் குடியரசு, ஒப்புரவு ஆகிவற்றை உறுதி செய்யும் ஒரு அரசாக இப்போது பொறுப்பேற்கும் அரசு விளங்க வேண்டுமேயொழிய, பழைய இராணுவ அரசின் தொடர்ச்சியாக இது இருக்கக் கூடாதென்று இப்புதனன்று வெளியிட்ட ஒரு செய்தியில் பான் கி மூன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 50 ஆண்டளவாய் இராணுவ ஆட்சியைக் கண்டுள்ள மியான்மாரில் தற்போது நிகழும் மாற்றங்களுக்கான முடிவுகள் அனைத்து கட்சிகளையும் கலந்து ஆலோசித்து எடுக்கப்படும் முடிவுகளாக இருக்க வேண்டும் என்று பான் கி மூன் வலியுறுத்தினார்.அமைதிக்கான நொபெல் பரிசையும், மக்களின் பெரும்பான்மை ஆதரவையும் பெற்ற Aung San Suu Kyi கடந்த 20 ஆண்டுகளாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு, கடந்த நவம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்டபோது, மற்ற அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்கக் கோரி ஐ.நா.பொதுச் செயலர் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.