2011-03-29 14:57:30

அரசியல் என்பது செயல்பாடின்றி இருக்கும்போது வன்முறை பிறக்கின்றது என்கிறார் புனித பூமி பொறுப்பாளர்


மார்ச் 29, 2011. அரசியல் என்பது செயல்பாடின்றி இருக்கும்போது, நம்பிக்கையின்மைகளும் வன்முறை மொழியும் பேச்சுவார்த்தைகளில் புகுந்து பதட்ட நிலைகளுக்குக் காரணமாகின்றன என்றார் புனித பூமியின் புனித இடங்களுக்கான பொறுப்பாளர் குரு Pierbattista Pizzaballa.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பதட்டநிலைகள் அதிகரித்து வருவது குறித்து வத்திக்கான் வானொலிக்கு பேட்டி வழங்கிய கப்புச்சின் சபை குரு Pizzaballa, அண்மைக்காலங்களில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதுபோல் தோன்றுவது ஆபத்தானதாக இருப்பினும், பேச்சுவார்த்தைகள் மூலம் இப்பதட்டநிலைகளைக் களையும் வாய்ப்பு உள்ளது என்றார்.
பழைய வன்முறைக்கு எருசலேம் பகுதி திரும்புவதாக தான் நம்பவில்லை என்று கூறிய குரு, அரசியல் தலைவர்களிடையேயான தொடர்புகளும், அரசியல் உறவுகளும் புதுப்பிக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.